
வரும் ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்று ஜப்பானின் பாபா வங்கா கணித்திருக்கும் நிலையில், அது இந்தியாவை தாக்குமா என்ற அச்சமும் எழுந்துள்ளது.
ஜப்பானின் பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி என்ற பெண், மிக விசித்திரமான முறையில், அதே வேளையில், துல்லியமாக, உலகில் நிகழவிருக்கும் அபாயங்கள் குறித்து முன்கணித்து வழங்கி வருகிறார்.
இவர் தற்போது 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலகையே புரட்டிப்போடும் சுனாமி பேரலைகள் தாக்கக் கூடும் என்று மிகத் தெளிவான கனவு மூலம் முன்கணித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதற்கு முன்பும், இவரது கணிப்புகள் துல்லியமாக நடந்திருப்பதால், இவரது அசைவுகளை உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.
மங்கு கலை ஓவியராக உலகுக்கு அறிமுகமான ரையோ, தனது தெளிவான கனவுகளில் காணும் சம்பவங்களை வரையத் தொடங்கினார். அவர் 1980 முதல் தனது தெளிவான கனவுகளை வரையத் தொடங்கி, அது அடுத்த சில ஆண்டுகளில் அவ்வாறே நடந்தும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவரது ஓவியங்களை ஆதரவாளர்கள் தொடர்ந்து பார்த்து வந்துள்ள நிலையில், அடுத்தடுத்து உலகில் நடந்த சம்பவங்களோடு ஓவியங்கள் ஒத்துப்போவதை கண்கூடாகப் பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில்தான் தற்போது மிக மோசமான சுனாமி பற்றிய ஓவியம் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கனவே 1991 ஃபிரெட்டி மெர்குரியின் மரணம், 1995 கோபே நிலநடுக்கம், 2011ஆம் ஆண்டு ஜப்பானின் சுனாமி போன்றவற்றை அவற் துல்லியமாக வரைந்திருந்ததை நினைவுகூர்கிறார்கள். அதன்பிறகே, அவரை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை பெற்றவராக உலகம் அங்கீகரித்து அதன் தொடர்ச்சியாக அவரது ஓவியங்கள் தொடர்ந்து ஆய்வுக்கும் உள்பட்டு வருகிறது.
தற்போது, தெற்கு ஜப்பானின் கடல்பரப்பு கொதிப்பது போன்று ஓவியம் வரைந்திருப்பதால், ஜப்பானின் கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலை சீற்றம் ஏற்படலாம், அதனால் மிக மோசமான சுனாமி ஏற்படலாம் என்றும், ரையோ, ஜப்பான், தைவான், இந்தோனேசியா உள்ளிட்ட வைர வடிவில் இருக்கும் நாடுகள் சுனாமியால் பாதிக்கப்படுவதைப் பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.