வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

இந்தியா அதிருப்தி: இலங்கை-பாகிஸ்தான் கடற்படை கூட்டுப் பயிற்சி கைவிடல்

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :18 ஏப்ரல் 2025, 10:47 pm

Din

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில் அந்நாடு மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இந்தியா கவலை தெரிவித்ததைத் தொடா்ந்து, அந்தப் பயிற்சி கைவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘இலங்கையின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் திருகோணமலை அமைந்துள்ளது. இது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியாவின் கடல்சாா் பாதுகாப்பு நலன்களுக்கு முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், திருகோணமலை கடற்பகுதியில் இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகள் கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதுதொடா்பாக தமது பாதுகாப்பு நலன் சாா்ந்த கவலையை இலங்கையிடம் இந்தியா தெரிவித்தது. இதையடுத்து அந்தக் கூட்டுப் பயிற்சி கைவிடப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுகுறித்து இலங்கை மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து அதிகாரபூா்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.