பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

ஸ்வீடனில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி... 16 வயது சிறுவன் கைது!

ஸ்வீடன் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியானதைப் பற்றி...

ஸ்வீடனில் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

Published On :

ஸ்வீடன் நாட்டில் சாலையில் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

உப்சலா நகரத்தில் வக்சலா சதுக்கத்தின் அருகில் கடந்த ஏப்.29 ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தத் தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் 16 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்வீடன் நாட்டில் குற்றவாளி கும்பல்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வரையறைகளின்படி அந்நாட்டில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் உரிமம் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஸ்வீடனின் ஒரிப்ரோ நகரத்தில் செயல்பட்டு வந்த கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.