
ரஷியாவின் ஆளில்லா சிறிய ரக விமானங்களில் (ட்ரோன்கள்) இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள் பயன்படுத்தப்படுவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
ஈரானில் வடிவமைக்கப்பட்டு ரஷிய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் ட்ரோன்கள், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன்களின் உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டை உக்ரைன் முன்வைத்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டுவரும், ஷாஹெட் 136 ஆளில்லா போர் வான்வழி விமானங்களில் இந்த உதிரிபாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் தரப்பு வெளியுறவுத் துறை மூலம் முறையாக இது குறித்து இரு முறை தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த விஷே இன்டர்டெக்னாலஜி நிறுவனத்துக்குச் சொந்தமான மின் திருத்திகள் (E300359) இந்த ட்ரோன்களில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆரா செமிகன்டக்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாமர்கள், ட்ரோன்களின் செயற்கைக்கோள் வழிகாட்டுதல் அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது,
''இந்தியாவின் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களின் ஏற்றுமதி, அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான உள்நாட்டு சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய ஏற்றுமதிகள் நமது எந்தச் சட்டங்களையும் மீறவில்லை என்பதை உறுதிசெய்ய தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது கூடுதல் வரி: டிரம்ப்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.