உலகம்
லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்
லெபனானின் தெற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்ரேல் வியாழக்கிழமை தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தியது.
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவினா் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஓா் ஆண்டுக்கு முன்பு இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே அமெரிக்கா முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் குழுவின் இரண்டாவது கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள சூழலில் இஸ்ரேல் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

