காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

சிரியா மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல் குறித்து...

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்

Published On :

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தளவாடங்களைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவின், மத்திய மாகாணத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் கட்டமைப்புகள், தளவாடங்கள் ஆகியவற்றைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக, இன்று (டிச. 20) அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

இந்த ராணுவ நடவடிக்கைக்கு, "ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்டிரைக்" எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், தாக்குதல்களில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், நடவடிக்கைகள் மேலும் தொடரும் எனவும் அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார்.

முன்னதாக, சிரியாவின் பல்மைரா பகுதியில், கடந்த டிச.13 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் சிரியாவின் ராணுவப் படைகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தின் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் பீட் ஹெக்செத் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியதாவது:

”இந்தத் தாக்குதல் போரின் துவக்கம் அல்ல, இது ஒரு பழிவாங்கும் பிரகடனம். உலகின் எந்தவொரு பகுதியில் இருந்தாலும் சரி நீங்கள் அமெரிக்கர்களைக் குறிவைத்தால் உங்களை அமெரிக்கா வேட்டையாடி கொல்லும். இன்று, நாங்கள் எங்களின் எதிரிகளை வேட்டையாடி கொன்றுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

Summary

In Syria, the United States has launched airstrikes targeting the ISIS terrorists.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.