ஜப்பானில் தொழிற்சாலையில் கத்திக்குத்து தாக்குதல்: பலர் காயம்

ஜப்பானில் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Updated on
1 min read

ஜப்பானில் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

ஜப்பானில் டோக்கியோவின் மேற்கே உள்ள மிஷிமா நகரில் ரப்பர் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை கத்தியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் எட்டு பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர் தொழிற்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலைமைகள் உள்பட வேறு எந்த விவரங்களும் உடனடியாகத் தெரியவில்லை.

Summary

Several people were hospitalised after being stabbed at a factory in central Japan on Friday, media reports said.

கோப்புப்படம்.
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா! எந்தெந்தப் பொருள்களுக்குத் தடை?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com