

தைவானைச் சுற்றி அனைத்து ராணுவப் பிரிவுகளையும் சேர்த்து பெரிய அளவிலான போர்ப் பயிற்சியை, நாளை (டிச.30) நடத்த, உள்ளதாக சீன ராணுவம் அறிவித்துள்ளது.
போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ராணுவம், கப்பல் கடை, விமானப்படைகள் அனுப்பட்டுள்ளதாகவும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.
'Justice Mission 2025' என்ற பெயரில் தைவானின் ‘பிரிவினைவாத’ சக்திகளுக்கு எதிரான எச்சரிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் போர் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தைவானுக்கு சுமார் 1,115 கோடி டாலர் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்யவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்ததற்குப் பிறகு, இந்தப் போர்ப் பயிற்சி அறிவிப்பை சீனா அறிவித்துள்ளது.
தைவானுக்கு நடுத்தர தொலைவு ஏவுகணைகள், ஹோவிட்சர் பீரங்கிகள், ட்ரோன்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை விற்பனை செய்வதற்காக 8 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 1,115 கோடி டாலா் ஆகும்.
சீனா நடத்தவுள்ள போர்ப் பயிற்சியை தைவான் அதிபர் அலுவலகம் விமர்சித்துள்ளது.
கடந்த 1949-ஆம் ஆண்டில் முடிந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் சுதந்திரமாக செயல்பட்டுவருகிறது. எனினும், அந்தத் தீவை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாகவே சீனா கருதுகிறது.
தைவானை எப்போது வேண்டுமானாலும் தங்களுடன் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளதாக சீனா கூறிவருகிறது. தேவைப்பாட்டால் ராணுவ வலிமையைக்கூட இதற்காகப் பயன்படுத்தலாம் என்று சீனா கூறுகிறது.
தைவானை தனி நாடாக அங்கீகரிக்கும் வகையில் அந்தப் பகுதிக்கு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு தலைவா்களோ உயரதிகாரிகளோ வந்தால் அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது.
தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அவ்வப்போது தைவானைச் சுற்றிலும் சீனா போர் ஒத்திகையை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.