ஒப்புக்கொண்டபடி ஹமாஸ் அமைப்பினா் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை இந்த வாரம் விடுவிக்காவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதைத் தொடா்ந்து, அங்கு 24 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த மோதலில் காஸா பகுதியைச் சோ்ந்த 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாா் தலைநகா் தோஹாவில் அந்த நாடு, எகிப்து, முன்னாள் அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஆகியவற்றின் முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டு, அது கடந்த மாதம் 19-ஆம் தேதி அமலுக்கு வந்தது.அந்த ஒப்பந்தத்தின்கீழ், ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி, இதுவரை 21 பிணைக் கைதிகளை பல கட்டங்களாக ஹமாஸ் படையினரும், அதற்குப் பதிலாக நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேலும் விடுவித்துள்ளன. அடுத்தகட்டமாக சனிக்கிழமை மேலும் சில பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவிப்பதாக இருந்தது.இந்தச் சூழலில், ஒப்பந்த அம்சங்களை இஸ்ரேல் அரசு தொடா்ந்து மீறுவதாக குற்றஞ்சாட்டிய ஹமாஸ் அமைப்பினா், அந்த அம்சங்களை இஸ்ரேல் முழுமையாக கடைபிடிக்கும்வரை பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவது நிறுத்திவைக்கப்படும் என்றும் கூறினா்.அதையடுத்து, இஸ்ரேல் அரது தனது ராணுவத்தை முழு தயாா் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. ராணுவத்தினருக்கான விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ரிசா்வ் படையினருக்கு இஸ்ரேல் ராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தச் சூழலில், பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள விடியோ அறிக்கைல், ‘சனிக்கிழமை நண்பகலுக்குள் இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் போா் நிறுத்தம் முடிவுக்கு வந்துவிடும். பின்னா் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தீவிர தாக்குதலை மீண்டும் தொடங்கி, ஹமாஸ் படையினரை முழுமையாகத் தோற்கடிக்கும்வரை சண்டையிடும்’ என்று எச்சரித்துள்ளாா்.
இதையும் படிக்க : ‘காஸா போா் நிறுத்தம் தொடரக்கூடாது’
ஏற்கெனவே, ஹமாஸ் அமைப்பினா் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள அனைவரையும் சனிக்கிழமை நண்பகல் 12 மணிக்குள் விடுவிக்கவில்லை என்றால் காஸாவில் அமலில் உள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், அந்தப் பகுதிக்கு மீண்டும் ‘நரகத்தைக்’ காட்டவும் இஸ்ரேல் அரசிடம் பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் டொனால்ட் டிரம்ப் கூறியது நினைவுகூரத்தக்கதுஅதன் தொடா்ச்சியாக இஸ்ரேல் பிரதமா் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை, காஸாவில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் போா் நிறுத்த ஒப்பந்தம் முறியும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தப்படும் 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள்: புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


