கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின் உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!

மூன்றாம் நிலை மென்பொறியாளர்களுக்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பம் வரவிருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பு

News image

மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் - கோப்புப் படம்

Updated On :14 ஜனவரி 2025, 10:04 pm IST

இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை (ஏஐ) பணியில் சேர்க்க பல்வேறு நிறுவனங்களும் திட்டமிட்டு வருகின்றன. வேலைச் சந்தையில் ஏஐ-யின் தாக்கம், அதன் இன்றியமையாமை சிந்திக்கத்தக்கதே. அந்த வகையில், மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் தனது நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், முகநூல் செயலிகளில் பணிபுரியும் நடுத்தர அல்லது மூன்றாம் நிலை மென்பொறியாளர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்க்க திட்டமிட்டுள்ளார்.

மேலும், பணிநீக்கம் செய்யப்படும் பணியாளர்களுக்கு இழப்பீடாக தலா 5 லட்சம் டாலர் (ரூ. 4.32 கோடி) வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, செலவினத்தைக் குறைக்கும்வகையில், கூகுள் நிறுவனமும் இரண்டு ஆண்டுகளாக தனது நிறுவனப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்து, ஏஐ தொழில்நுட்பத்தைச் சேர்த்துக் கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.