/

மெட்டா பிசினஸ் ஏஜென்ட் சேவைக்கு டோக்கன் அடிப்படையில் கட்டணம் வசூல்!

மெட்டா பிசினஸ் ஏஜென்ட் சேவைக்கு டோக்கன் அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளது பற்றி...

News image

வாட்ஸ் ஆப் - பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 6:11 pm IST

வாட்ஸ்ஆப் பிசினஸ் செயலியில் உள்ள மெட்டா பிசினஸ் ஏஜென்ட் சேவைக்கு வரும் ஆகஸ்டு 1 முதல் டோக்கன் அடிப்படையில் கட்டணம் வசூல் செய்யப்படவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் 200 மில்லியனுக்கும் (20 கோடி) அதிகமான வணிக நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் பிசினஸ் சேவையைப் பயன்படுத்துகின்றன.

வாட்ஸ்ஆப் பிசினஸ் என்பது வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் எளிதாகத் தொடர்புகொள்வதற்காக, மெட்டா நிறுவனம் உருவாக்கிய ஒரு செயலி. இந்த செயலியில் வியாபாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல கூடுதல் அம்சங்கள் இருக்கும்.

மேலும், நிறுவனத்தின் பெயர், லோகோ, கடை முகவரி, வேலை நேரங்கள், இணையதள முகவரி மற்றும் மின்னஞ்சல் போன்ற விவரங்களை வாடிக்கையாளர்கள் நமது சுயவிவரப் பகுதியில் பார்க்கலாம்.

இந்த நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பிசினஸ் செயலி வழியாக வாடிக்கையாளர்களுக்குப் பதிலளிக்க உதவும் தனது ஏஐ தொழில்நுட்பமான 'மெட்டா பிசினஸ் ஏஜென்ட்' சேவைக்கு, ஒரு செய்திக்கு இவ்வளவு என்ற அடிப்படையில் கட்டணத்தை வசூலித்து வந்தது.

வரும் ஆகஸ்டு 1 முதல் டோக்கன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 10 லட்சம் டோக்கன்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 190 உலகளாவிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு வாடிக்கையாளரின் கேள்வி மற்றும் அதற்கு ஏஐ அளிக்கும் பதில் கொண்ட ஒரு உரையாடலுக்கு 20,000 முதல் 25,000 டோக்கன்கள் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Meta has announced that, starting August 1, charges based on a token system will be levied for the Meta Business Agent service within the WhatsApp Business app.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.