ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ: ரூ. 71 லட்சம் நன்கொடை அளித்த டென்னிஸ் வீரர்!

நன்கொடை அளிப்பவர்களை ஊக்குவிப்பதாகவும் டென்னிஸ் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் கூறினார்.

News image

டென்னிஸ் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் - AP

Updated On :16 ஜனவரி 2025, 8:00 pm IST

லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ விபத்துக்கு நன்கொடை அளிப்பதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் தெரிவித்துள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றில் கிறிஸ்டியன் கரினை 6-2, 6-1, 6-0 என்ற கணக்கில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் தோற்கடித்தார். வெற்றியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் நகரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ விபத்து நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

ஃபிரிட்ஸ் நீண்ட காலம் வாழ்ந்த லாஸ் ஏஞ்சலிஸில் தற்போது காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டிருப்பதையடுத்து, தான் ஆஸி. முதல் சுற்றில் வெற்றி பெற்ற பரிசுத்தொகை 82,000 டாலரை (சுமார் ரூ. 71 லட்சம்) நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார். மேலும், லாஸ் ஏஞ்சலில் காட்டுத் தீ விபத்துக்கு நன்கொடை அளிப்பவர்களை ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

இதற்கு முன்னதாக, லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத் தீ விபத்தில் உதவிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்கு உதவும்விதமாக, மேடிசன் கீஸ் 20,000 டாலர் நன்கொடை அளித்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் ஒரு வாரத்துக்கும்மேலாக நீடித்து வரும் காட்டுத் தீயால், இதுவரையில் குறைந்தது 25 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது; 15 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் கூறுகின்றனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பும் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பிங்க் பொடி தூவி தீயை அணைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.