அமெரிக்க பாடகியும் பாடலாசிரியையுமான டெய்லர் ஸ்விப்ட் குறைந்த வயதில் ஹால் ஆஃப் ஃபேம் (வாழ்நாள் சாதனையாளர்) விருது வென்ற முதல் பெண்ணாக சாதனை படைத்துள்ளார்.
பென்சில்வேனியா நகரத்தைச் சேர்ந்த டெய்லர் ஸ்விப்ட் (36 வயது) தனது பாடல்களுக்காக 14 கிராமி விருது, 12 கன்ட்ரி மியூசிக் அசோசியேஷன், 8 அகாடமி ஆஃப் கன்ட்ரி மியூசிக் விருதுகளையும் வென்று அசத்தியுள்ளார்.
புகழ்ப்பெற்ற இசையை அங்கீகரிக்க பாடல் எழுதுபவர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது 1969ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னதாக இந்த விருதினை க்ளோரியா எஸ்டீஃபன், கரோலி கிங், பால் சிம்சன், பில்லி ஜோயல், ஜான் போன் ஜோவி, ரிச்சி சம்போரா என பலர் வென்றுள்ளார்கள்.
முன்னதாக ஸ்டீவ் வொண்டர் தனது 13ஆவது வயதிலேயே இசையமைத்து பாடல் பாடியுள்ளார். இவர் 32ஆவது வயதில் இந்த விருதை வென்றுள்ளார். குறைந்த வயதில் இந்த விருதை வென்ற சாதனை இவரிடம்தான் இருக்கிறது.
பெண்கள் பிரிவில் டெய்லர் ஸ்விப்ட் முதலிடமும் ஒட்டுமொத்த வரிசையில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நியூயார்க்கில் நடந்த 55ஆவது விருது விழாவில் சாதனை விருது வென்றது குறித்து டெய்லர் ஸ்விப்ட் கூறியிருப்பதாவது:
உள்ளுணர்வின் காரணமாகத்தான் பாடல் எழுதினேன். யாரும் எனக்குச் சொல்லித் தரவில்லை. இதுவரைக்கும் எனது நன்றியை வெளிக்காட்ட முடிவதில்லை. இளம் கலைஞர்கள் தங்களுக்கு என்ன வேண்டும், என்ன பிடிக்கிறது என்பதில் ஆழமாகச் செல்ல வேண்டும். அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
Summary
Taylor Swift becomes the youngest woman inducted into the Songwriters Hall of Fame at age 36
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சச்சின் சாதனை முறியடிப்பு..! குறைந்த வயதில் இந்திய அணியில் தேர்வான சூர்யவன்ஷி!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன் கைது

தமிழா் மேன்மைக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவா் கருணாநிதி - ராகுல் காந்தி புகழாரம்

டெய்லர் ஸ்விஃப்ட் எழுதி, பாடிய டாய் ஸ்டோரி 5 பட பாடல்!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



