
உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் ‘காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்’ இன்று (ஜன. 19) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா போா் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12 மணி) அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிபந்தனைகளைப் புதிதாக விதித்துள்ளார்.
அதில், இஸ்ரேலிலிருந்து சிறைப் பிடிக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் வெளியிடக் கோரியுள்ளார். தாமதப்படுத்தினால் காஸாவில் குறிப்பிட்ட நேரத்தில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படாது என்றும் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தின்படி இஸ்ரேலிலிருந்து விடுவிக்கப்பட இருக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் பிணைக் கைதிகளின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்படுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக ஹமாஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.