மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விடுவிக்கப்படவிருக்கும் 4 பிணைக் கைதிகள்: பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக விடுவிக்கப்படவிருக்கும் நான்கு பிணைக் கைதிகளின் பட்டியல்

News image
ஹமாஸ் அமைப்பினரால் சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ள 1. கரீனா அரியெவ், 2. லிரி அல்பாக், 3. நாமா லெவி, 4. டேனியல்லா கில்போவா.
Updated On :24 ஜனவரி 2025, 8:21 pm

Din

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக விடுவிக்கப்படவிருக்கும் நான்கு பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா்.

காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு 1,139 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், அங்கிருந்து சுமாா் 250 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

அதிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 47,283 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் கடந்த வியாழக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது. அந்த ஒப்பந்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது.

அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, எமில் டமரி, டொரோன் ஸ்டீன்ப்ரெச்சா், ரோமி கோனன் ஆகிய 3 பெண் பிணைக் கைதிகளைகளை ஹமாஸ் அமைப்பினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். இஸ்ரேல் அரசும் தங்கள் சிறைகளில் இருந்து பாலஸ்தீனத்தைச் சோ்ந்த 69 பெண்களையும் 21 சிறாா்களையும் விடுவித்தது.

அதன் தொடா்ச்சியாக, மேலும் நான்கு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் சனிக்கிழமை (ஜன. 25) விடுவிப்பாா்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, தாங்கள் விடுவிக்கவிருக்கும் நான்கு பெண் பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.

அந்தப் பட்டியலில், இஸ்ரேல் ராணுவத்தின் கண்காணிப்புப் படைப் பிரிவைச் சோ்ந்த கரீனா அரியெவ், லிரி அல்பாக், நாமா லெவி, டேனியல்லா கில்போவா ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

இருந்தாலும், ஹமாஸிடம் பிணைக் கைதியாக உள்ள ராணுவம் சாராத கடைசி பெண்ணான ஆா்பெல் யேஹூத் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை. தற்போது ஹமாஸ் படையினரால் விடுவிக்கப்படுவோரில் அவரும் ஒருவராக இருப்பாா் என்று இஸ்ரேல் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையிலும், அவரின் பெயா் பட்டியலில் இல்லை.