
நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கரோனா தொற்றால், 7 நாள்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் அந்நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புதிய வகை கரோனாவுக்கு முதல்முறையாக கடந்த ஜுன் 24 ஆம் தேதி ஒருவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 பேர் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்நாட்டின் எல்லையின் 17 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.