ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...
NATO Secretary General Mark Rutte with Prime Minister Modi.
பிரதமர் மோடியுடன் நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே.(படம் | பிடிஐ)
Published on
Updated on
1 min read

ரஷியாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார் .

அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் நேட்டோ பொதுச் செயலர் மார்க் ரூட்டே பேசுகையில், “இந்தியா, சீனா மற்றும் பிரேசிலில் உள்ள தலைவர்கள் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை உக்ரைனுக்கு எதிரான போரில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வையுங்கள்.

நீங்கள் சீனாவின் அதிபராகவோ, இந்தியப் பிரதமராகவோ அல்லது பிரேசிலின் அதிபராகவோ இருந்து, ரஷியாவுடன் வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்து, ரஷிய அதிபராக இருக்கும் விளாதிமீர் புதின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், 100 சதவிகிதம் பொருளாராதத் தடை விதிக்கப்படும்.

குறிப்பாக, இந்த மூன்று நாடுகளுக்கும் சொல்லவருவது என்னவென்றால், தில்லியில், பெய்ஜிங்கில், பிரேசிலியாவில் வசிக்கும் அந்தந்த நாட்டுத் தலைவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

அதனால், விளாதிமீர் புதினுக்கு போனில் தொடர்பு கொண்டு உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட கூறுங்கள். இல்லையெனில் விளைவுகள் மிகவும் மோசமாகக் கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ ஆதரவை அறிவித்திருந்த நிலையில், ரஷியா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு கடுமையான பொருளாதாரத் தடைவிதிக்கப்படும் என நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்திருப்பது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அளவுக்கு ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியா ஒருவேளை ரஷியாவில் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியாவுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Summary

Mark Rutte warned the leaders of China, India, and Brazil that if they continued trading with Russia and buying its oil and gas, he would impose 100 per cent secondary sanctions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com