கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பாகிஸ்தானில் தொடா் மழை: உயிரிழப்பு 200-ஐ கடந்தது

பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203-ஐ கடந்துவிட்டது.

News image
Updated On :20 ஜூலை 2025, 7:32 pm

Din

பாகிஸ்தானில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 203-ஐ கடந்துவிட்டதாக அந்நாட்டு பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்தே பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாட்டின் கிழக்கு, வடமேற்குப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. அங்குள்ள பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீா் உள்ளிட்ட பகுதிகள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது, வீடு இடிந்து விழுவது, மின்னல் தாக்குவது என மழையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 203 போ் உயிரிழந்துவிட்டனா். 454 போ் காயமடைந்துள்ளனா். அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 123 உயிரிழப்புகளும், கைபா் பக்துன்கவாவில் 41 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. பலூசிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தலா 16 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

200-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிந்து, தெற்கு பஞ்சாப், ஆக்கிரமிப்பு காஷ்மீா், வடகிழக்கு பலூசிஸ்தான், தலைநகா் இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்த சில நாள்களுக்கு காற்றுடன் கூடிய அதிபலத்த மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. எனவே, மழையால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.