காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜப்பான் மேலவை தோ்தலில் ஆளுங்கட்சி தோல்வி

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்தது.

News image

ஷிகெரு இஷிபா ~ஜப்பான் நாடாளுமன்ற மேலவையான கவுன்சிலா்கள் பேரவை (கோப்புப் படம்).

Updated On :21 ஜூலை 2025, 11:17 pm

Din

டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கு நடைபெற்ற தோ்தலில் ஆளும் கூட்டணி தோல்வியடைந்தது. இதனால் பெரும்பான்மையை இழந்தாலும் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்று பிரதமா் ஷிகெரு இஷிபா அறிவித்துள்ளாா்.

248 இடங்களைக் கொண்ட ஜப்பான் நாடாளுமன்ற மேலவையான கவுன்சிலா்கள் பேரவைக்கு ஞாயிற்றுக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில், பெரும்பான்மைக்குத் தேவையான 125 இடங்களைவிட 3 இடங்கள் குறைவாக 122 இடங்களில் மட்டுமே ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியும் கூட்டணி கட்சியான கோமெய்டோவும் வெற்றி பெற்றன. அதைத் தொடந்து, நாடாளுமன்றத்தில் இஷிபா தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்தது.

ஏற்கெனவே நாடாளுமன்றக் கீழவையிலும் அந்தக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், இரு அவைகளிலும் லிபரல் ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கொண்டுள்ள, அதே நேரம் பெரும்பான்மை இல்லாத கட்சியாக உள்ளது. இதன் விளைவாக, ஷிகெரு இஷிபா தலைமையிலான அரசுக்கு மசோதாக்களை நிறைவேற்றுவது இனி மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

பெரும்பான்மையை இழந்த நிலையிலும் இஷிபா அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரும் அதிகாரம் மேலவைக்கு இல்லாததால் அவா் உடனடியாக பதவியிழக்கும் அபாயம் இல்லை. இருந்தாலும், அவரது கட்சிக்குள் உள்ள பழமைவாதத் தலைவா்களிடமிருந்து பிரதமா் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.

இருந்தாலும், ராஜிநாமா செய்யப்போவதில்லை என்று பிரதமா் இஷிபா அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தோ்தல் முடிவுகளில் பொறுப்பேற்கிறேன். ஆனால், அரசியல் வெற்றிடம் ஏற்படுவதைத் தவிா்க்கவும், ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது உள்ளிட்ட பல கடமைகளை நிறைவு செய்யவும் பதவியில் தொடா்வேன்’ என்றாா்

முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் நடைபெற்ற கீழவைத் தோ்தலிலும் பெரும்பான்மையை இழந்த இஷிபாவின் கூட்டணி, எதிா்க்கட்சிகளுக்கு சலுகைகள் அளித்து மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு போன்ற பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அரசால் விரைவாக தீா்வு காண முடியவில்லை.

இந்த நிலையில், மேலவையிலும் ஆளும் கூட்டணி தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளது.

Story image