
சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்து வரும் கனமழையால், 44 பேர் பலியானதுடன், 9 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங் மாகாணத்தில், கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதில், வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மலை மாவட்டங்களான மியூன் மற்றும் யான்கிங் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் தற்போது வரை 44 பேர் பலியாகியதாக, அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இத்துடன், 9 பேர் மாயமாகியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணிகள், தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீனாவின் மேலும் சில பகுதிகளும் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் மட்டும் தற்போது வரை 80,000-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, 31 சாலைகள் கடும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாகவும், 136 கிராமங்களில் மின்சாரம் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவின் நிதியமைச்சகம் மற்றும் அவசரகால மேலாண்மை அமைச்சகம் இணைந்து அந்நாட்டின் மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதிக்கு சுமார் 48.94 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான தொகையை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வெள்ளத்தில் மிதக்கும் பெய்ஜிங்: 44 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.