அணு ஆயுத ஒப்பந்தம்! அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் பதில் என்ன?

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
பிரதிப் படம்
பிரதிப் படம்ENS
Published on
Updated on
1 min read

அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கக் கூடாதென்றும், அந்நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், அவருக்கு அடுத்ததாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ஒப்பந்தத்தை ரத்து செய்தார். தொடர்ந்து, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்தார்.

இருப்பினும், அணு ஆயுதத் தயாரிப்பில் ஈரான் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததுடன், அமெரிக்காவின் உத்தரவுகளையும் அச்சுறுத்தல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றுகூறி, பேச்சுவார்த்தைக்கும் மறுப்பு தெரிவித்தது.

அணு ஆயுதத்துக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், கடுமையான தடைகளும் ராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

இதனிடையே, பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள ஏவுகணை நகரமாக மிகப்பெரிய சுரங்கத்தில், ராணுவம் சேமித்து வைத்துள்ள நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகள் இருப்பதாக 85 வினாடி விடியோவையும் ஈரான் வெளியிட்டது.

இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே ஓமன் நாட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும், ஈரான் தொடர்ந்து மறுப்புதான் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்தான், அணு ஆயுத ஒப்பந்தத்துக்கான முன்மொழிவுகளை ஈரானுக்கு அமெரிக்க வெள்ளைமாளிகை அனுப்பியுள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதுதான், ஈரானுக்கு நல்லது என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதனையடுத்து, ஈரான் மக்களின் கொள்கை, உரிமைகள், நாட்டின் நலன்களைக் கருத்தில்கொண்டு, அமெரிக்காவின் முன்மொழிவுக்கு தகுந்த பதில் அளிக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com