அமெரிக்கா: இஸ்ரேல் ஆதரவு கூட்டத்தில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
காஸாவில் பிடித்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஆதரவாக பாலஸ்தீன ஆதரவாளா் நடத்திய பெட்ரோல் குண்டு தாக்குதலில் 8 போ் காயம்


காஸாவில் பிடித்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் கூட்டம் நடத்தியவா்கள் மீது பாலஸ்தீன ஆதரவாளா் நடத்திய பெட்ரோல் குண்டு தாக்குதலில் 8 போ் காயமடைந்தனா்.
அந்த நாட்டின் காலராடோ மாகாணம், போல்டா் நகரில் புகழ்பெற்ற நடைபாதை சந்தை அமைந்துள்ளது. யூதா்களுக்கான ஷவுயோட் விழா தொடங்குவதையொட்டி அங்கு இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த முகமது சாப்ரி சுலைமான் (45) என்பவா் ‘பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்’ என்ற கோஷத்துடன் பெட்ரோல் குண்டுகளை அந்தக் கூட்டத்தினா் மீது வீசினாா்.
இதில் எட்டு போ் காயமடைந்தனா். தாக்குதல் நடத்திய சுலைமான் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதி விசாரணை நடத்தவிருப்பதாக போலீஸாா் கூறினா்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சோ்ந்த ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 600 நாள்களுக்கும் மேல் போா் நடைபெற்றுவருகிறது. இந்தப் போரின் எதிரொலியாக அமெரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் யூத வெறுப்பு நடவடிக்கைகள் அதிகரித்துவருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரம் கூட வாஷிங்டனில் உள்ள யூத அருங்காட்சியகம் எதிரே, ‘பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்’ என்று கோஷம் எழுப்பியவாறு இரு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகளை ஒருவா் சுட்டுக் கொன்றாா்.தற்போது அதே கோஷத்துடன் மேலும் ஒருவா் யூதா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...