
அடிஸ் அபாபா, எத்தியோப்பியா/ஜெனிவா போன்ற தென்னாப்ரிக்க நாடுகளின் முக்கிய நகரங்களை மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், ஒவ்வொரு அணுவையும் அசைத்துப் பார்த்து வருகிறது.
ஆப்ரிக்க நாட்டின் இது, சமூக-பொருளாதார சமநிலையை புரட்டிப்போட்டிருப்பதோடு, அந்நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியால் பசி, பட்டினி, பாதுகாப்பின்மை, மக்கள் அகதிகளாக பல இடங்களுக்கு இடம்பெயர்தல் போன்றவை அதிகரித்திருப்பதாக உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்ட ஆப்பிரிக்காவின் காலநிலை 2024 அறிக்கை பயமுறுத்துகிறது.
அப்படி என்ன நடக்கிறது?
வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடந்த பத்தாண்டுகளில் மிக வெப்பமான 2024.
2024 கடற்பரப்பின் வெப்பம் அதிகரிப்பு
ஒருபக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் சீரழிக்கிறது.
இயற்கையை ஆட்டிப்படைக்கும் எல் நினோ இதன் பின்னணியில் இருப்பதாகத் தகவல்.
ஆப்பிரிக்க நாட்டின் காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை, உடனடியாக உலகம் வெப்பமயமாதலைக் கட்டுப்படத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலர் செலஸ்டே சௌலோ தெரிவித்துள்ளார்.
மிக மோசமான வானிலை காரணமாக, கனமழை பெய்து, பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவும், மழையின்றி, வறட்சி, தண்ணீர்பஞ்சலும் பல நாடுகளின் நிலையாக உள்ளது.
ஆப்ரிக்காவில் தற்போது மீள்தன்மையை உருவாக்க, தேவையான முயற்சிகளை வலுப்படுத்த, அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற உறுதி ஏற்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, வேளாண்மை, சுற்றுச்சூழலில் இருக்கும் சவால்களையும், உணவு, குடிநீர், எரிபொருள் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றை உறுதி செய்வதில் இருக்கும் சிக்கல்களையும் எடுத்துரைக்கிறது. ஆனால், அதே வேளையில், இருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான ஆயுதங்களையும் அது எடுத்துரைக்கிறது.
ஆப்ரிக்காவின் பெரும் பகுதிகளை 2024ஆம் ஆண்டு வெப்ப அலைகள் தாக்கியிருக்கின்றன. இதன் தரை வெப்பம் 1991ஆம் ஆண்டு முதல் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கி பிறகு வேகமாக உயர்ந்து வருகிறது. 2023ஆம் ஆண்டில், கடல் பரப்பின் வெப்பம் கடுமையாக இருந்துள்ளது.
இவை அனைத்துமே கவலையளிக்கும் வகையில் இருப்பதை இயற்கை ஆர்வலர்களும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.