ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! குழப்பத்தில் டிரம்ப்!

ரஷியா - உக்ரைன் போரை தற்போதைக்கு நிறுத்த சாத்தியமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- AP
Updated On :5 ஜூன் 2025, 11:15 am

DIN

ரஷியா மீதான உக்ரைன் ட்ரோன் தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை ரஷியா அளிக்க வாய்ப்புள்ள நிலையில், அதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் உறுதி செய்துள்ளார்.

ரஷியாவுக்குள் கன்டெய்னர்கள் மூலம் ட்ரோன்களைக் கொண்டு சென்ற உக்ரைன், கடந்த ஞாயிற்றுக்கிழமையில் பல்லாயிரக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு ட்ரோன் தாக்குதலை நடத்தியது. சிறிய ரக ட்ரோன்கள் என்றாலும், ஒரே நேரத்தில் ஏராளமான ட்ரோன்கள் மூலம், விமானத் தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

விமானங்களை அழிக்கும் அளவுக்கு திறன் இல்லாவிட்டாலும், தற்கொலை ட்ரோன்கள் என்பதால், விமானங்கள் மீது வெடித்துச் சிதறி, விமானத்தையும் தீப்பற்ற வைத்து அழித்து விட்டன. உக்ரைனின் இந்த ட்ரோன் தாக்குதலில், ரஷியாவின் 41 போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷியாவின் விமானங்களும் அழிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், இந்த இரு நாடுகளுக்கிடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், போர் நிலைமை குறித்து ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்தார்.

இதுகுறித்து, டிரம்ப் பேசுகையில், புதினுடன் சுமார் 75 நிமிடங்கள் பேசினேன். உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். உக்ரைனின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கவிருப்பதாக புதின் கூறினார்.

இதன்மூலம், தற்போதைக்கு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட சாத்தியமில்லை என்று தெரிகிறது என்று தெரிவித்தார்.

மேலும், இந்த தொலைபேசி உரையாடலில், இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்தும் இருவரும் விவாதித்ததாக ரஷிய அதிகாரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.