டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

டிரம்ப்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

டிரம்ப்பை நீக்கிவிட்டு அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்-ஐ நியமிக்க எலான் மஸ்க் வலியுறுத்தியிருக்கிறார்.

News image

துணை அதிபா் ஜே.டி, வான்ஸ் - அதிபா் டிரம்ப். - file photo

Updated On :6 ஜூன் 2025, 5:53 pm IST

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் டெஸ்லா நிர்வாகி எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்து. அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டொனால்ட் டிரம்பை பதவி நீக்க தீர்மானம் கொண்டுவந்து, துணை அதிபரை ஓவல் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவின் 47வது அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்தக் கருத்தை அவர் சுயமாகப் பதிவிடவில்லை. மலேசிய எழுத்தாளர் போட்ட பதிவுக்கு ஆம் என்றுதான் பதிலளித்துள்ளார்.

"அதிபர் vs எலான். யார் வெற்றி பெறுகிறார்கள்? என் பணம் எலானின் மீதுதான். டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவருக்குப் பதிலாக ஜே.டி. வான்ஸ் நியமிக்கப்பட வேண்டும்," என்று மலேசியாவைச் சேர்ந்த வலதுசாரி எழுத்தாளர் இயன் மைல்ஸ் சியோங் வியாழக்கிழமை ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருந்தார். "ஆம்," என்று சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு சியோங்கின் பதிவுக்க எலான் மஸ்க் பதிலளித்திருக்கிறார்.

அமெரிக்க அதிபருக்கும் டெஸ்லா உரிமையாளருக்கும் இருந்த நல்லுறவு, வரி விதிப்பு மற்றும் செலவினங்கள் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த மசோதாவால் உடைந்து போனது. இதையடுத்தே பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் வரை எலான் மஸ்க்கால் இன்று அதிபருக்கு எதிராகக் கிளப்பப்பட்டது.

நாசா விண்வெளி நிறுவனத்தை வழிநடத்த ஒரு தொழில்நுட்ப நிபுணரின் ஆதரவைப் பெற்ற வேட்பாளருக்கான எனது ஆதரவை வாபஸ் பெற்றது உள்பட, தான் எடுத்த சில முடிவுகளுக்கு எலான் மஸ்க் ஏன் வருத்தப்பட்டார் என்பதைத் தன்னால் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.