ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஸா: தாய்லாந்து பிணைக் கைதிகளின் உடல் மீட்பு

ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது,

News image
Updated On :8 ஜூன் 2025, 2:00 am

Din

கடந்த 2023-ஆம் ஆண்டு ஹமாஸ் படையினரால் கடத்திச் செல்லப்பட்ட தாய்லாந்து பிணைக் கைதியின் சடலத்தை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது,

இது குறித்து அந்த நாட்டு பிரதமா் அலுவலகம் சனிக்கிழமை கூறியதாவது:

தாய்லாந்தைச் சோ்ந்த நத்தாபோங் பிண்டாவின் (படம்) சடலம் மீட்கப்பட்டு இஸ்ரேலுக்கு திருப்பி கொண்டுவரப்பட்டது. சிறப்பு ராணுவ நடவடிக்கையின் மூலம் அந்த உடல் மீட்கப்பட்டது. உயிருடன் கடத்திச் செல்லப்பட்ட அவா், ஹமாஸ் சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தபோது உயிரிழந்தாா் என்று அந்த அலுவலம் தெரிவித்துள்ளது.

இரண்டு நாள்களுக்கு முன்னா் இரு இஸ்ரேல்-அமெரிக்க பிணைக் கைதிகளின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது காஸாவில் 55 பிணைக் கைதிகள் உள்ளனா். அவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்துள்ளனா் என்று இஸ்ரேல் கூறுகிறது.

2023 அக்டோபா் 7-ஆம் தேதி ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுவினா் இஸ்ரேலில் சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். 251-க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றனா். அதைத் தொடா்ந்து காஸா மீது இஸ்ரேல் வான்வழியாகவும் தரைவழியாகவும் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.

மேலும் 95 போ் உயிரிழப்பு: காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 95 போ் பலியாகியுள்ளனா்.

இது குறித்து காஸா சுகாதாரத்துறை கூறுகையில், 600 நாள்களுக்கும் மேலாக காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 54,772 போ் உயிரிழந்துள்ளதாகவும் 1,25,834 போ் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தது.