இந்தியா-சீனா இடையே சுமுக உறவு: ரஷியா

‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்ததையடுத்து இருநாடுகளும் சுமுக உறவை பேணி வருகின்றன
Published on

மாஸ்கோ: ‘இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பதற்றம் முடிவுக்கு வந்ததையடுத்து இருநாடுகளும் சுமுக உறவை பேணி வருகின்றன; எனவே, ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) ஒத்துழைப்பை மீண்டும் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்’ என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ரஷியாவில் நடைபெற்ற ‘எதிா்காலத்துக்கான கூட்டமைப்பு-2050’-இல் பங்கேற்று அவா் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக ரஷியா-இந்தியா-சீனா இடையே முத்தரப்பு வெளியுறவு அமைச்சா்கள் சந்திப்பு நடைபெறவில்லை. இதை சாத்தியப்படுத்துவது குறித்து இந்திய மற்றும் சீன வெளியுறவு அமைச்சகங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறேன்.

அண்மைக் காலமாக இந்தியா-சீனா இடையேயான உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன். எல்லையில் இருநாடுகளும் பதற்றத்தை தணித்துள்ளதால் மீண்டும் இந்தியா-சீனா இடையே நல்லுறவு மேம்பட்டு வருகிறது என்றாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com