நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

News image

தீ விபத்து ஏற்பட்ட 67 மாடிக் கட்டடம்.

Photo credit: Dubai Media Office

Updated On :14 ஜூன் 2025, 11:53 am

DIN

துபையில் 67 மாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

துபையில் மெரினா பின்னாக்கிள் உள்ள 67 மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மேல் தளத்தில் பற்றிய தீ மளமளவென மற்ற பகுதிக்கும் பரவியது. உடனே அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து 3,820 குடியிருப்பாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு சிறப்பு குழுக்களை துபை சிவில் பாதுகாப்பு அனுப்பியது. அவர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இரவு முழுவதும் போராடினர். சுமார் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு சனிக்கிழமை அதிகாலை தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை துபை சிவில் பாதுகாப்பு உறுதிப்படுத்தியது.

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

தீவிபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்குவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம் கட்டடத்தை குளிர்விக்கச் செய்யும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விரைவில் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.