2025ஆம் ஆண்டில் ஜூலை 5ஆம் தேதி உலகமே பேரழிவை சந்திக்கப்போவதாக புதிய பாபா வங்கி கணித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் ரையோ தத்சுகி என்பவர், தற்போது புதிய பாபா வங்கா என அறியப்படுகிறார். கலைஞரான இவர், 2021ஆம் ஆண்டு முதல் தனது கனவில் வரும் சில நிகழ்வுகளை வரைந்து, அதில் தெரிய வரும் தகவல்களை வெளியுலகுக்குக் கூறி வருகிறார். இவை பெரும்பாலும் உண்மையில் நடந்தும் இருப்பதால், இவரை புதிய பாபா வங்கா என்கிறார்கள்.
இவர் ஏற்கனவே தனது கனவில் வந்தததை ஓவியமாக வரைந்து உருவாக்கிய முன்கணிப்புகளில், 2011 நிலநடுக்கம், பிரின்ஸ் டயானா மரணம், கரோனா பேரிடர் போன்றவையும் அடங்கும்.
இது மட்டுமல்லாமல் அடுத்த 2030ஆம் ஆண்டில் கரோனா போன்ற பெருந்துயரம் மீண்டும் வரும் என்றும் அவர் கணித்துள்ளார்.
அவர் எழுதியிருக்கும் புத்தகத்தில் ஜூலை 5ஆம் தேதி பேரழிவு காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது தற்போது வைரலாகியிருக்கிறது. அதாவது, ஜப்பானில் வரும் ஜூலை 5ஆம் தேதி பேரழிவு ஏற்படப்போவதாக அவர் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த நாளில், ஜப்பானுக்குச் செல்லும் விமானங்களில் முன்பதிவுகள் குறைந்து, ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தவர்களும் தங்களது டிக்கெட்டை ரத்து செய்து வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க.. திறக்கப்படுகிறது கேஜிஎஃப் தங்கச் சுரங்கம்! 80 ஆண்டுகளுக்குப் பின்! இனி தங்கம் விலை?
இந்த நிலையில், புதிய பாபா வங்காவின் கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும், இதுபோன்று உலகப் பேரழிவுகளை முன்கணிக்க முடியாது என்றும், இவை வெறும் புரளி என்றும் ஜப்பான் நாட்டு அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அறிவிப்பினால், பல்வேறு வகையிலும் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஜூலை மாதத்தில் விமான டிக்கெட்டுகள், விடுதிகள் முன்பதிவு குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே ஜப்பானியர்கள் முன்பதிவு செய்திருந்த சுற்றுலா திட்டங்களையும் ரத்து செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.