ஈரான் மதகுரு கமேனியைக் கொன்றால்தான்... நெதன்யாகு கூறுவதென்ன?

ஈரான் மதத் தலைவர் கமேனியை கொல்வது குறித்து இஸ்ரேல் பிரதமர் கூறியதைப் பற்றி...
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.
Published on
Updated on
1 min read

ஈரான் மதத் தலைவர் கமேனியைக் கொல்வதுதான் ஒரே தீர்வு என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில், மதகுரு அயத்துல்லா கமேனி கொல்லப்படுவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்ததாகக் கூறப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளிக்க மறுத்திருந்த நெதன்யாகு, “எது தேவையோ அது நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், “மத்திய கிழக்கில் உள்ள அனைவரையும் பயமுறுத்தும் ஈரானால், அரை நூற்றாண்டு காலமாக மோதல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சவூதி அரேபியாவில் உள்ள அரம்கோ எண்ணெய் வயல்களில் குண்டுவீசித் தாக்கியுள்ளன. ஈரான் பயங்கரவாதத்தை எல்லா இடங்களிலும் பரப்புகிறது.

நாங்கள் எங்கள் எதிரியை மட்டும் எதிர்த்துப் போராடவில்லை. உங்கள் எதிரியையும் எதிர்த்துப் போராடுகிறோம். ஈரானின் பயங்கரவாதத்தால், உலகம் அணுசக்தி பேரழிவின் விளிம்பிற்குத் தள்ளுகிறது. இதைத் தடுத்து முற்றுப்புள்ளி வைக்க இஸ்ரேல் நினைக்கிறது. தீய சக்திகளை எதிர்த்து நிற்பதன் மூலம் மட்டுமே நாம் அதைச் செய்ய முடியும்.

இன்று டெல் அவிவ்... நாளை நியூயார்க்... இதைத் தடுக்க வேண்டும். மேலும், ஈரானின் மதகுரு அயதுல்லா அலி கமேனியைக் கொல்வது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com