இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பற்றி...
Iran missile attack on Israeli hospital
இஸ்ரேல் மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் படம்: இஸ்ரேல் வெளியுறவுத் துறை
Published on
Updated on
1 min read

இஸ்ரேலின் மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.

அதற்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது.

இருநாடுகளும் 7-வது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வரும் நிலையில், தெற்கு இஸ்ரேலின் பீர்ஷெபாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை மீது ஈரான் நேரடித் தாக்குதல் நடத்தியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

யூதர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அரபியர்கள் என அனைத்து தரப்பினரும் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனையை ஈரான் தாக்கியிருப்பதாக இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், தனது மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் இஸ்ரேல் தொடர்ந்து பாதுகாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com