
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் ஞாயிற்றுக்கிழமை படகு கவிழ்ந்ததில் 7 சுற்றுலாப் பயணிகள் பலியானார்கள்.
ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் ஷாஹி பாக் பகுதியில் 10 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். மூவரை உள்ளூர்வாசிகள் மீட்டனர்.
மீட்பு அதிகாரிகள் கூறியதாவது, 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மீதமுள்ள 3 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சவாலான நிலப்பரப்பு மற்றும் பகுதியின் தொலைதூரத்தன்மை மீட்பு முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளன.
இந்த சம்பவத்தை தேசிய சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் அம்ஜத் அலி உறுதிப்படுத்தினார். மேலும் பலியானோரின் குடும்பத்தினருக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
காணாமல் போன சுற்றுலாப் பயணிகளைக் கண்டுபிடிக்க மீட்பு நடவடிக்கையை விரைவுபடுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.