சிரியாவில் தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்- 22 பேர் பலி

டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Suicide bomber kills at least 22 in Syria
தற்கொலைப்படை தாக்குதல் நடந்த தேவாலயம்.
Published on
Updated on
1 min read

டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 22 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தன்னிடம் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 22 பேர் பலியானார்கள். 63 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

ஆனால் சிரியா உள்துறை அமைச்சகம், ஐ.எஸ்.ஐ.எல் குழுவைச் சேர்ந்தவர் தேவாலயத்திற்குள் நுழைந்து அங்குள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

பலியானவர்களில் குழந்தைகளும் அடங்குவர் என்று சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விவசாயிகளுக்கு இனிக்காத மாங்கனி! 10 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி பரப்பு குறையும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com