‘உடனடி தேவை வான்வழி போா்நிறுத்தம்’
ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம்


தங்கள் நாட்டில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உக்ரைன் பிரதமா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.
வியாழக்கிழமை நள்ளிரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை உக்ரைன் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா 58 ஏவுகணைகள், சுமாா் 200 ட்ரோன்களை வீசி சரமாரியாக தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
ரஷியாவும் உக்ரைனும் வான் மற்றும் கடல்வழியாக தாக்குதல் நடத்திக்கொள்வதை மட
மட்டும் நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை முதலில் மேற்கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பரிந்துரைத்த மறுநாளே இந்த சரமரி வான்வழித் தாக்குதலை ரஷியா நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்காக ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்க தீவிரமாக பரிசீலித்துவருவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...