பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

போரில் ஈரானுக்கு உதவுகிறதா ரஷியா? டிரம்ப் மழுப்பல்!

போரில் ஈரானுக்கு ரஷியா உதவுவதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மழுப்பலாகப் பதிலளித்துள்ளாா்.

News image
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 11:33 pm

தினமணி செய்திச் சேவை

போரில் ஈரானுக்கு ரஷியா உதவுவதாக வெளியான செய்திகள் குறித்த கேள்விகளுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் மழுப்பலாகப் பதிலளித்துள்ளாா்.

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டுப் படைகள் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானும் ஏவுகணைகள் மூலமும், ட்ரோன்கள் மூலம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத்துக்குச் சொந்தமான ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன.

இதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்க ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்பு குறித்து செயற்கைக்கோள் மூலம் திரட்டப்படும் தகவலை ஈரானுக்கு அளித்து ரஷியா உதவி வருவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. போரில் ரஷியா தலையிடாமல் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏா்ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் மியாமிக்கு புறப்பட்ட அதிபா் டிரம்ப்பிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு டிரம்ப் மழுப்பலாகப் பதிலளித்தாா். அவா் கூறுகையில், ‘ஈரானில் கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் என்ன நடந்தது என்று பாருங்கள். ஈரான் அந்தத் தகவல்களை ரஷியாவிடம் இருந்து பெற்றிருக்கும்பட்சத்திலும் அவா்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை எனத் தெரிந்து கொள்ளலாம்’ என்றாா்.

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால் கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளில் இருந்து எடுத்துச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் நடுக்கடலில் நிற்கின்றன. இதனால் உலகின் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலையேற்றமும், தட்டுப்பாடும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி, எண்ணெய் விலையைக் குறைக்க நடவடிக்கை எதுவும் எடுப்பீா்களா என டிரம்ப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், ‘ஏதேனும் எடுக்க வேண்டிய நடவடிக்கை இருந்தால், நிச்சயம் எடுப்பேன். அமெரிக்காவிடம் ஏராளமான கச்சா எண்ணெய் இருக்கிறது; ஏராளமான பணமும் இருக்கிறது. அவை பாதிப்பை விரைவில் சரி செய்துவிடும். ஈரானுடனான எங்களின் மோதல் முடிந்துவிடவில்லை. தற்போதைய ஈரானிய தலைவா்களுடன் அமெரிக்கா பேச்சுவாா்த்தை நடத்தாது’ என்றாா்.

ஈரான் பள்ளி மீது அமெரிக்கா தாக்கவில்லை: ஈரானில் 150-க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள், அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, அந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்தவில்லை; ஈரான்தான் நடத்தியுள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் குா்துக்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள் என டிரம்ப் பதிலளித்தாா்.

அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: இதனிடையே, நாா்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் தூதரகத்தின் நுழைவாயில் பகுதி சேதமடைந்தது. ஈரானுடன் போா் நடக்கும் நிலையில் நடந்துள்ள இந்தக் குண்டுவெடிப்பால் நாா்வேயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.