திடீரென முடங்கிய எக்ஸ்(ட்விட்டர்) - ஸ்தம்பித்த பயனர்கள்!
எக்ஸ்(X) வலைதளம் முடங்கியதால் பயனர்கள் பாதிப்பு..


எக்ஸ் வலைதளம் திடீரென முடங்கியது. இன்று(மார்ச் 10) மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் வலைதளம் சீரானது.
எக்ஸ் தளத்துக்குப் போட்டியாக இருக்கும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்கள் அவ்வப்போது முடங்கிப் போவதை காண முடிகிறது. இந்த நிலையில், பிரபல சமூக வலைதளமான எக்ஸ் தளம் அண்மைக் காலங்களில் தொழில்நுட்ப கோளாறுகளாலோ அல்லது பிற காரணங்களாலோ முடங்கப்படாத நிலையில், இன்று திடீரென முடங்கியுள்ளது.
இதனால் இந்தியா மட்டுமல்லாது அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளிலும் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் தவித்தனர்.
இந்த நிலையில், எக்ஸ் தளம் திடீரென முடங்க என்ன காரணம்? என்பதற்கு எலான் மஸ்க்குக்கு சொந்தமான மேற்கண்ட நிறுவனத்தின் தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...