பாகிஸ்தான்: தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு

பாகிஸ்தானில் தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான(கோப்புப்படம்)
விமான(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் தரையிறங்கியபோது விமானத்தின் சக்கரம் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து லாகூருக்கு வியாழக்கிழமை புறப்பட்ட பிஐஏ விமானம் பிகே-306 இன் பின்புற சக்கரங்களில் ஒன்று, தரையிறங்கியபோது காணாமல் போனது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது, விமானம் "காணாமல் போன சக்கரத்துடன்" கராச்சியில் இருந்து புறப்பட்டதா அல்லது புறப்படும் போது பிரிந்து விழுந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கராச்சி விமான நிலையத்தில் சக்கரத்தின் சில துண்டுகள் காணப்பட்டன. விமானம் புறப்படும் போது பின்புற சக்கரங்களில் ஒன்று பழுதடைந்த நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. வியாழக்கிழமை நடந்த சம்பவத்தால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்! - விஜய்

இருப்பினும், இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றார். பிஐஏ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், பிகே-306 விமானம் திட்டமிட்டபடி "மென்மையான மற்றும் சீரற்ற தரையிறக்கத்தை" மேற்கொண்டது.

விமானம் தரையிறங்கிய பிறகு அதன் கேப்டன் மேற்கொண்ட சோதனையில் ஆறு சக்கர(பின்புறம்) அசெம்பிளிகளில் ஒன்று காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com