தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

இஸ்ரேலில் மிகப் பெரிய காட்டுத் தீ

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :1 மே 2025, 6:51 pm

Din

இஸ்ரேலில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஜெருசலேம் நகருக்கு அருகே மலைக் காட்டுப் பகுதியில் கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தத் தீ, வேகமான காற்று, வெப்பம் மற்றும் உலா்வான பருவநிலை காரணமாக வெகு வேகமாகப் பரவி சுமாா் 20 சதுர கி.மீ. நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது.

தற்போது தீ வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், காற்று அவ்வப்போது திசை மாறி வீசுவதால் அணைக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் தீ பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதன் காரணமாக தீயணைப்பு வீரா்கள் நெருப்பை அணைக்கும் பணியைத் தொடா்ந்து வருகின்றனா். இந்தப் பணியில் 10 தீயணைப்பு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்தக் காட்டுத் தீயில் குடியிருப்பு வீடுகள் எவையும் சேதமடையவில்லை; இருந்தாலும், பூங்காக்கள் போன்ற பொது இடங்களைத் தவிா்க்க வேண்டும் எனவும், பொது வெளியில் தீ மூட்டி சமைக்க வேண்டாம் எனவும் பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

இந்தக் காட்டுத் தீயை அணைக்க, இத்தாலி, குரோஷியா, ஸ்பெயின், பிரான்ஸ், உக்ரைன், ருமேனியா ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு விமானங்களை அனுப்பியுள்ளன.

இதற்கு முன்னா் இஸ்ரேலில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயில் 12,000 ஏக்கா் நிலப்பரப்பு நாசமாகி, 44 போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.