மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!

உக்ரைன் மீதான ரஷியாவின் டிரோன் தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

உக்ரைன் நகரங்களின் மீது ரஷியா டிரோன் தாக்குதல்கள் நடத்தியுள்ளது. - ஏபி

Published On :

உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷியாவின் டிரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், ஒரு பள்ளிக்கூடம் மற்றும் அங்குள்ள கடைகள் மீது இன்று (மே.1) அதிகாலை ரஷிய டிரோன்கள் குண்டுகளை வீசியுள்ளன. இந்தத் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன், 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, வெளியான விடியோக்களில், தாக்குதலில் அங்குள்ள கட்டடங்களில் தீப்பற்றி எரிவதும் அதனை அணைக்க தீயணைப்புப் படையினர் போராடுவதும் பதிவாகியுள்ளது. இதேபோல், உக்ரைனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான காரிவ் மீதான டிரோன் தாக்குதலில் அங்குள்ள பெட்ரோல் நிலையம் வெடித்து சிதறியுள்ளது.

இதுகுறித்து, உக்ரைனின் விமானப் படை கூறுகையில், ரஷியா 170 டிரோன்கள் மற்றும் அதன் டிகோய்களை (போலிகள்) உக்ரைனின் 5 நகரங்களுக்குள் அனுப்பி நேற்று (ஏப்.30) தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அதில் 74-க்கும் மேற்பட்டவை அடையாளம் காணப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், ரஷியா உக்ரைன் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில், உக்ரைனின் 8 டிரோன்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாளை முன்னிட்டு ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அடுத்த வாரம் 72 மணி நேர போர்நிறுத்தம் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.