ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, 2 வது நாள் இரவாக நேற்று (மே 5) ரஷியாவின் மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், இருநாடுகளின் எல்லையிலுள்ள பகுதிகள் மற்றும் ரஷியாவின் மத்தியப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களினால் ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், வோரோனெஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தகவல்கள் யாவும் உறுதிச் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, இரண்டாம் உலகப் போரில் ரஷியா உள்ளிட்ட நேச நாடுகள் நாஜி ஜெர்மனியை வெற்றிக்கொண்ட நாள் வரும் மே 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதனால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மே 8 முதல் 72 மணிநேர போர்நிறுத்தத்தை அறிவித்திருந்த சூழலில் இந்தத் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்ரைனில் பரவலாக ரஷியா வான்வழித் தாக்குதல்
போா் எதிரொலி: சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு
அமெரிக்கா தாக்குதல்! ஈரான் உடன் ரஷியா, சீனாவை இணைக்கும் ரயில் பாலம் தகர்ப்பு!
பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



