புதிய போப் தேர்வானார்! முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு!

வாடிகனின் கத்தோலிக்கத் திருச்சபையில் புதிய போப் தேர்வானதைப் பற்றி...
ராபர்ட் ப்ரெவோஸ்ட்..
ராபர்ட் ப்ரெவோஸ்ட்..
Published on
Updated on
1 min read

கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கார்டினல்களின் முதல் நாள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால், அந்தக் கூட்டம் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை தொடங்கியது. இந்த நிலையில் இன்று இரவு புதிய போப் தேர்வு செய்யப்பட்டதைக் குறிக்கும் விதமாக புகைப் போக்கி வழியாக வெண்புகை வெளியிடப்பட்டது.

உடல்நலக் குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266-வது தலைவா் போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21 ஆம் தேதி காலமானார். கத்தோலிக்க திருச்சபை மரபுப்படி, அடுத்த போப்பை தோ்ந்தெடுப்பதற்கான கூட்டம் மே 5 ஆம் தேதியிலிருந்து மே 10-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, வாடிகனிலுள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் மூடிய அரங்கத்துக்குள் இதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெற்றது. இந்த ரகசிய வாக்கெடுப்பில் 71 நாடுகளைச் சோ்ந்த 133 கார்டினல்கள் பங்கேற்றனர்.

அதன்படி, புதிய போப் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் அறிவித்தது. ரோம் நகரின் சிஸ்டைன் தேவாலயத்தில் 133 கார்டினால்களும் சேர்ந்து புதிய போப்பைத் தேர்ந்தெடுத்தனர். இதன் அடையாளமாக அங்குள்ள புகைக் கூண்டில் வெள்ளைப் புகை வெளியிடப்பட்டது. அதைக் கண்ட அங்கு குழுமியிருந்த ஏராளமான மக்கள் ஆரவாரம் செய்தனர். 

புதிய போப்பாக 69 வயதான ராபர்ட் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக அமெரிக்கருக்கு போப்பாக வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் பிறந்தவரான ராபர்ட் ப்ரெவோஸ்ட், பெரு நாட்டில் கத்தோலிக்க திருச்சபை பணிகளை மேற்கொண்டவர். போப் பதவிக்கு அமெரிக்கர் ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். புதிய போப் இனி 14 ஆம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: களமிறங்கியது கடற்படை: பாகிஸ்தானின் கராச்சியில் தாக்குதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com