உக்ரைன் நாட்டில் பயணிகள் பேருந்தின் மீது ரஷிய ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை நேற்று (மே 16) துருக்கியில் நடைபெற்றது.
முதல்முறையாக இருநாட்டு அதிகாரிகளும் நேரில் சந்தித்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தை, 2 மணி நேரத்துக்குள் முடிவடைந்தது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் ஏதேனும் ஓர் மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (மே 17) அதிகாலை உக்ரைனின் சுமி மாகாணத்தின் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
சுமி மாகாணத்தின் பிலோபிலியா நகரத்தில், பேருந்து ஒன்றின் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சுமி மாகண நிர்வாகத்தின் தரப்பில் கூறுகையில், இந்தத் தாக்குதல் ரஷியாவின் மற்றொரு போர்க் குற்றம் எனவும், எந்தவொரு ஆபத்தும் விளைவிக்காத மக்கள் போக்குவரத்துப் பேருந்தின் மீது ரஷியா வேண்டுமென்றே தாக்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
முன்னதாக, துருக்கியில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இருநாடுகளும் சுமார் 1,000 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், இருதரப்புக்கும் இடையில் பல முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இருப்பினும், ரஷியா முன்வைத்துள்ள கருத்துக்களில், தங்களுக்கு உடன்பாடில்லை என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: ஒருவா் உயிரிழப்பு

சூடானில் திருமண நிகழ்ச்சியில் ட்ரோன் தாக்குதல்: 30 பேர் பலி

உக்ரைன் - ரஷியா பரஸ்பர தாக்குதல்: 10 போ் பலி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


