எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வெளிநாட்டு சிறைகளில் 23,000 பாகிஸ்தானியர்கள்!

வெளிநாட்டு சிறைகளில் 23 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அறிவிப்பு.

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2025, 6:03 pm IST

வெளிநாட்டு சிறைகளில் 23 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல், பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23,000 பாகிஸ்தானியர்களில், 12,156 பேர் செளதி அரேபியாவில் உள்ளதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அந்நாட்டு வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது.

எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 5,292 பாகிஸ்தானியர்களும், பஹ்ரைனில் 450 பாகிஸ்தானியர்களும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றச் சம்பவங்களில் கைதாகி சிறையில் உள்ளனர்.

சராசரியாக 400 பாகிஸ்தானியர்கள் சீன சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், போதைப் பொருள் கடத்தல், கற்பழித்தல், வழிப்பறி, கொலை மற்றும் போலியான கரன்சி நோட்டுகளை அச்சடித்தது போன்ற குற்றச் சம்பவங்களில் சிறையில் உள்ளனர்.

கத்தாரில் 338 பாகிஸ்தானியர்கள் பணமோசடி, நிதி முறைகேடு, கொலை, பாலியல் தொல்லை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓமன் நாட்டில் 309 பாகிஸ்தானியர்கள், மலேசியாவில் 255 பாகிஸ்தானியர்கள் இதுபோன்ற குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.