ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

தாஜ் மஹாலின் வரலாறு தெரியுமா? அமெரிக்க வெளியுறவுத் துறை செயலரிடம் ஈரான் தூதரகம் கேள்வி!

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரிடம் தாஜ் மஹாலின் வரலாறு தெரியுமா என ஈரான் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

News image

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தனது மனைவியுடன். - X

Updated On :26 மே 2026, 3:39 pm IST

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளரிடம் தாஜ் மஹாலின் வரலாறு தெரியுமா என ஈரான் தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தனது மனைவியுடன் இந்தியாவிற்கு முதல்முறையாக அரசுமுறைப் பயணமாக வந்திருந்தார். பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிய அவர் ஞாயிறன்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

பின்னர், தனது மனைவியுடன் நேற்று (மே 25) தாஜ் மஹாலைச் சுற்றிப் பார்க்கச் சென்ற ரூபியோ அங்கு எடுத்த புகைப்டத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஈரானிய தூதரகம் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்சித்துள்ளது. அதில், “தாஜ் மஹாலின் வரலாறு அல்லது கட்டிடக்கலை பற்றித் தெரிந்திருந்தால் ரூபியோ இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்திருக்க மாட்டார். பேரரசர் ஷாஜகான் தனது ஈரானிய மனைவியின் மீதுள்ள காதலால் ஈரானிய கட்டிடக் கலை நிபுணர்களை வைத்து இந்தக் நினைவுச் சின்னத்தைக் கட்டினார். தற்போது, ரூபியோவின் அரசு இன்று ஈரானின் நாகரிகத்தையே அழித்துவிடுவதாக அச்சுறுத்தி, பிற நாகரிகங்களையும் அவமதித்து வருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் தொடர்பாக வெளியிட்ட பதிவு தாஜ் மஹாலை கட்டியது யார் என்ற விவாதத்திற்குள் சென்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுபோல, தாஜ்மஜால் பற்றி இருதரப்புகள் இணையத்தில் சண்டையிடுவது இது முதல்முறையல்ல.

ஈரானியர்கள் அடிக்கடி இவ்வாறு மற்றவர்களின் உழைப்பைத் தங்களுடையதாகக் கூறிக் கொள்வதாக இணையவாசிகள் விமர்சிக்கும் வேளையில் தாஜ் மஹாலில் உள்ள பெர்சிய மொழி கல்வெட்டைப் பகிர்ந்து அதனைக் கட்டியவருக்கும் ஈரானுக்கும் உள்ள தொடர்பை ஈரானியர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் போர் 3 மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் உலக எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடனான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது.

இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு போரை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்திருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ரூபியோ தெரிவித்திருந்த நிலையில் அதற்கு ஈரான் மறுப்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

Summary

Iranian Embassy questions US Secretary of State about taj mahal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.