காஸாவினுள் போதுமான அளவிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென போப் பதினான்காம் லியோ வலியுறுத்தியுள்ளார்.
வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ, புனித பீட்டர் சதுக்கத்தில் தனது முதல் வார உரையை மக்களிடம் ஆற்றினார்.
அப்போது, போரில் பாதிக்கப்பட்ட காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல் விதித்துள்ள தடை விலக்கப்பட்டு அங்கு வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இத்துடன், காஸா பகுதியின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதுடன், வலி மிகுந்ததாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
”குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இதயத்தை நொறுக்கும் விலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, காஸாவினுள் போதுமான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனும் எனது வேண்டுகோளை மீண்டும் புதுப்பிக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 8 ஆம் தேதியன்று தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த போப் பதினான்காம் லியோ, இஸ்ரேல் - ஹமாஸ் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், காஸாவின் மீதான தனது ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள இஸ்ரேல், அப்பகுதியினுள் மருந்துக்கள், உணவுகள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் செல்லத் தடை விதித்துள்ளது.
இந்தத் தடைகளை உடனடியாக விலக்க வேண்டுமென பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இஸ்ரேல் அரசுக்கு தற்போது அழுத்தம் கொடுத்து வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் முதல் காஸாவினுள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் முடக்கி வரும் நிலையில், போதுமான உணவுகள் மற்றும் மருந்துக்கள் இன்றி லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இருப்பு: வேலூா் ஆட்சியா் வலியுறுத்தல்

அடிமை வணிகத்தில் வாடிகனின் பங்கு! மன்னிப்புக் கோரினார் போப் லியோ!

செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



