ரஷியாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது.
ரஷியா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாள்களாக தீவிரமான ட்ரோன் தாக்குதல்களை இரு நாடும் நடத்தி வருகின்றது.
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ உள்பட பல்வேறு மாகாணங்களைக் குறிவைத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமை இரவும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷியாவின் 10 மாகாணங்களை குறிவைத்து உக்ரைன் அனுப்பிய 105 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து மாஸ்கோ உள்பட ரஷியாவின் பல்வேறு மாகாணங்களில் விமான சேவை நேற்றிரவு 3 மணிநேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தை எடுத்துரைப்பதற்காக ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு நேற்று பயணம் செய்த கனிமொழி தலைமையிலான இந்திய எம்பிக்கள் சென்ற விமானமும் தரையிறங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது.
சில மணிநேரங்களில் இந்திய எம்பிக்கள் சென்ற விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், அவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் வரவேற்று பத்திரமாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்திய எம்பிக்கள் குழுவினர் இன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரக வளங்கள் மீது தாக்குதல்: ஈரான் திட்டம்!

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்

ரஷிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


