மூச்சை நிறுத்தி விடுவோம்: பயங்கரவாதி ஹபீஸ் போல மிரட்டும் பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர்
மூச்சை நிறுத்தி விடுவோம் என பயங்கரவாதி ஹபீஸ் போல மிரட்டியிருக்கிறார் பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர்


நீங்கள் தண்ணீரை நிறுத்தினால் நாங்கள் உங்கள் மூச்சை நிறுத்திவிடுவோம் என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் ஏற்கனவே மிரட்டியிருந்ததைப் போலவே பாகிஸ்தான் ராணுவ பேச்சாளர் அகமது ஷரீஃப் சௌத்ரி மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.
பாகிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்நாட்டு ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷெரிஃப் சௌத்ரி, எங்களுக்கான நீரை நீங்கள் நிறுத்தினால், உங்கள் மூச்சை நாங்கள் நிறுத்தி விடுவோம் என்று சிந்து நதிநீர் பாகிஸ்தானுக்குச் செல்வது நிறுத்தப்பட்டது குறித்து எச்சரித்துள்ளார்.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, சிந்து நதிநீர் நிறுத்தப்பட்டதும் முக்கியத்துவம் பெறுகிறது.
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் மூளையாக இருந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத், வழக்கமாக இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான மிரட்டல்களை விடுவித்து பேசும் நிலையில், பாகிஸ்தான் ராணுவப் பேச்சாளர் சொன்ன அதே வார்த்தைகளை அவர் ஏற்கனவே பயன்படுத்தி மிரட்டியிருக்கும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியிருந்தன.
இந்த நிலையில்தான், பயங்கரவாதி மிரட்டிய அதே வார்த்தைகளை, ராணுவ செய்தித் தொடர்பாளர் பேசியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
1960ஆம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பாகிஸ்தானின் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...