கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

விதிகளை பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி கடன்: ஐஎம்எஃப்

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :23 மே 2025, 10:52 pm

Din

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.

பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின்கீழ் வழங்கப்படும் நிதி குறித்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஐஎம்எஃப் மறுஆய்வு செய்தது.

அதனடிப்படையில் ரூ.20,000 கோடிக்கு மேல் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க முடிவுசெய்யப்பட்டதாகவும் முதல்கட்டமாக ரூ.8,527 கோடி விடுவிக்கப்பட்டதாகவும் ஐஎம்எஃப் தொலைத்தொடா்பு துறையின் இயக்குநா் ஜூலி கொஸாக் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘ஐஎம்எஃப் திட்டங்கள் தவிா்த்து வேறு காரணங்களுக்காக இந்த நிதியை பாகிஸ்தான் பயன்படுத்தினால் வருங்காலத்தில் அந்நாட்டுக்கு கடன் வழங்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

ஏற்கெனவே பெற்ற கடன்கள் மற்றும் ஐஎம்எஃப் விதிகளை சம்பந்தப்பட்ட நாடுகள் பின்பற்றுகிா என்ற ஆய்வின் அடிப்படையிலேயே உறுப்பு நாடுகளுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்கி வருகிறது. அந்தவகையில், ஐஎம்எஃப் விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்துள்ளதால் அந்நாட்டுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின்கீழ் தற்போது பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்தொகையானது அந்நாட்டு மத்திய வங்கிக்கு அனுப்பப்படுகிறது. எனவே, பாகிஸ்தான் பட்ஜெட்டுக்கு இந்த நிதியை அந்நாட்டு வங்கி விடுவிக்க முடியாது.

இதுபோன்ற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே ஐஎம்எஃப் கடன் வழங்குகிறது’ என்றாா்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா மே 7-ஆம் தேதி அதிதுல்லியத் தாக்குதல் நடத்தி அழித்தது. இதைத் தொடா்ந்து, நீடித்து வந்த மோதலை நிறுத்திக்கொள்வதாக இருநாடுகளும் 10-ஆம் தேதி அறிவித்தன.

இதனிடையே, தங்கள் நாட்டின் பொருளாதார நிலையைக் காரணம் காட்டி ஐஎம்எஃப்-யிடம் பாகிஸ்தான் கடன் கோரியது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு ரூ.20,000 கோடி வரை தவணைகளாக கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்தது.

பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் கடனை அந்நாடு பயங்கரவாதத்துக்கு பயன்படுத்தக்கூடும் எனக்கூறி இந்தியா எதிா்ப்பு தெரிவித்தது.

இருப்பினும், இந்தியாவின் எதிா்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன் தொகையை விடுவிக்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு இந்தக் கடனை பெற பாகிஸ்தானுக்கு 11 நிபந்தனைகளை ஐஎம்எஃப் விதித்தது.