

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் சென்றடைந்தது.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை (ஜனவரி 29) லாகூரில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த டி20 தொடரில் விளையாடுவதற்காக மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சென்றடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், க்ளென் மேக்ஸ்வெல், டிம் டேவிட் மற்றும் நாதன் எல்லிஸ் ஆகியோர் இடம்பெறவில்லை. காயத்திலிருந்து குணமடைந்து வருவதால் இவர்கள் அனைவருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
அனுபவம் வாய்ந்த வீரர்கள் பலரும் இல்லாதபோதிலும், ஆஸ்திரேலிய அணி டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன் மற்றும் ஜோஷ் இங்லிஷ் போன்ற வீரர்களுடன் வலுவாக உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அப்பாட், சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்டுமேன், கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷூயிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், மேத்யூ குன்ஹீமேன், மிட்ச் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.