கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சீன அச்சுறுத்தலில் இருந்து இந்திய-பசிபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தாா்.

News image
Updated On :31 மே 2025, 11:20 pm

Din

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக வெளிநாடுகளில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா வலுப்படுத்தும்.

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். அந்த நாடுகள் தன்னந்தனியாக விடப்படாது. சீனாவால் அச்சுறுத்தல் இருப்பது உண்மை. அதை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது என்றாா்.

எனினும் மாநாட்டில் சீனா தரப்பில் கலந்துகொண்ட அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக துணைத் தலைவரும், ரியா் அட்மிரலுமான ஹு காங்ஃபெங் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்தாா்.

அவா் பேசுகையில், ‘சீனா மீது அமெரிக்கா அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. சில குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, திரிக்கப்பட்டவை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலையற்ற சூழலை ஏற்படுத்த பிரிவினையைத் தூண்டி, மோதல்போக்கை உருவாக்க நடைபெறும் முயற்சிகளாகும்’ என்றாா்.